நந்தினியின் ‘சிவப்புக்கல் மூக்குத்தி’ – டிஜிடல் தமிழ் காமிக்ஸ்

என்னோடசிவப்புக்கல் மூக்குத்திடிஜிட்டல்லாக வெளி வந்திருக்குற முதல் தமிழ் காமிக்ஸ்அப்படீங்கிறதுல எனக்கும் என் டீமுக்கும் ரொம்ப சந்தோஷம். அது மட்டுமில்லாம, இந்தியமற்றும் வெளிநாட்டு மொழி காமிக்ஸ்களோட மொழிபெயர்ப்பா இல்லாம, தமிழிலேயே உருவாக்கப்பட்ட படைப்பு இந்த ‘சிவப்புக்கல் மூக்குத்தி’.

Sivappu Kal Mookuthi - Tamil Comic Book
Sivappu Kal Mookuthi – Tamil Comic Book

மார்ச் 2014′ நான் இந்த ப்ராஜெக்டை ஆரம்பிக்கும்போது“யாருமே இல்லாத கடையிலயாருக்குடா டீ ஆத்துரே?”ன்னு விவேக் சார் காமெடி பண்ணின மாதிரி, “தமிழ் காமிக்ஸ்க்குமார்க்கெட்டே இல்லியே, ஏன் ரிஸ்க் எடுக்குறே?”ன்னு சிலர் கேட்டாங்க. இது உண்மைதான்னு எனக்கும் தெரியும். ஆனா சுவாரசியமான, புதுசான, இந்த காலத்து இளைஞர்கள் விரும்புற மாதிரி கதைகள் வந்தா இந்த நிலை மாறும்ன்னு எனக்கு ஒரு நம்பிக்கை.

இந்த முழூ நீள கிராபிக் நாவலை உருவாக்க கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கடின உழைப்போட நானும் என் டீமும் போராடினோம். நடுவுல பல பிரச்சனைகள், தடங்கல்கள், சிரமங்கள் எல்லாத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்துது. டிசம்பர் மாதம் ப்ராஜெக்ட் நின்னு போற அளவுக்கு வந்து, அப்புறம் எப்படியோ சமாளிச்சு, தொடர்ந்து, ராப்பகல்ன்னு பாக்காம வேலை செஞ்சு ஜுன் மாதம் ப்ரொடக்ஷன் வேலைகளை முடிச்சோம். அதுக்கப்புறம் டிஜிட்டல் பப்ளிஷிங், மற்றும் ப்ரோமொஷனுக்கான வேலைகள்… லேட்டானாலும், எப்படியோ நல்லபடியா இப்போ வெளியிட்டாச்சு.

“டிஜிட்டலா? பேப்பர் புக்’கா வெளியிடலையா?”ன்னு நிறைய பேர் கேக்குறாங்க. ஒரு விஷயம் சொல்றேன். என்னோட ‘திரு திரு துறு துறு’ திரைப்படம் இந்தியாவுலையே முதன் முறையா டிஜிட்டலா படமாக்கப்பட்டு, டிஜிட்டலா ப்ராசஸ் செய்யப்பட்டு, டிஜிட்டலா மட்டுமே வெளியிடப்பட்ட படம். அந்த சமயத்துல ஒரு சில படங்கள்ல தான் ரெட் ஒன் டிஜிட்டல் காமெரா மூலமா படமாக்கப் பட்டு வெளிவந்திருந்தது. அப்பல்லாம், 35mm பிலிம் காமெராவை விட்டுக்கொடுக்க நிறைய பேர் தயங்கினாங்க. டிஜிட்டல் காமேராவுல படம்பிடிச்சா குவாலிட்டி நல்லாயிருக்காதுன்னு அதை ஏத்துக்க மறுத்தாங்க. ஆனா அடுத்த சில வருடங்கள்லயே கடகடன்னு டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து, தரமான புதுப்புது காமெராக்கள் வந்ததுக்கப்புறம், இன்னிக்கு கிட்டத்தட்ட எல்லாருமே டிஜிட்டல் காமெராவுலதான் படம் எடுக்குறாங்க.

இன்னொரு விஷயம். இப்பல்லாம் எல்லார் கையிலயும் ஸ்மார்ட் போன்ஸ் வந்தாச்சு. எல்லார் வீட்டுலயும் கம்ப்யூட்டர், லேப்டாப் இருக்கு. கரண்ட் பில், போன் பில் கட்டுறதுலேர்ந்து, வங்கி பரிவர்த்தனைகள் வரைக்கும் ஆன்லைன்ல தான் பண்றோம். பலமணிநேரங்கள் பேஸ்புக், ட்விட்டர், யூடியூப்ல தான் செலவாகுது. புதுசா வர்ற நியூஸ் எல்லாத்தையும் அந்தந்த வெப்சைட்டுகள்ல தான் போய்ப் படிக்கிறோம். வரலாறு, மருத்துவம், இலக்கியம், டெக்னாலஜி, சினிமா, அரசியல், இப்படி எல்லா விஷயங்களுக்கான தகவல்களையும் ஆன்லைன்ல தான் தேடித் தேடித் படிக்கிறோம். ஏன் ஒரு அட்ரஸ் வேணும்னாக் கூட முதல்ல கூகிள்ல ஒரு தட்டுத் தட்டிப் பாக்குறோம்.

அதே போல புத்தகங்களும் எப்பவோ டிஜிடல் ஆகியாச்சு. உலகம் பூரா பல லட்சம் மக்கள் தங்களோட கம்ப்யூட்டர், மொபைல், டாப்லெட்’கள்ல ஈ-புக்ஸ் படிக்கிறாங்க. நான் பேப்பர் புத்தகங்கள் வேண்டாம்னு ஒதுக்க சொல்லல. அவைகளோட அழகும், கொடுக்கும் அனுபவனும் அற்புதமானதுங்கறதை மறுக்க முடியாது… பிலிம் ஸ்டாக்’கில் படம்பிடிக்கப்படும் படங்கள் போல!

ஆனா, தினமும் மாறிட்டு இருக்குற டெக்னாலஜிக்கு ஏத்த மாதிரி படைப்பாளிகளும் வளைஞ்சு கொடுத்தா அவங்களோட படைப்புகள் இன்னும் நிறைப் பேருக்கு போய் சேரும். அதனால தான் ‘சிவப்புக்கல் மூக்குத்தி’ காமிக்ஸை முதல்ல டிஜிட்டல்லா வெளியிட்டுருக்கேன். பேப்பர் பிரிண்ட் வரலாம்… வராமலும் போகலாம். அது வரைக்கும் காத்துருக்காதீங்க 🙂 உங்க வீட்டுல ஒரு கம்ப்யூட்டர்-ரோ லேப்டாப்-போ இருந்தா போதும். http://www.mbcomicstudio.com போய், ‘சிவப்புக்கல் மூக்குத்தி’ ஈ-புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கலாம். ட்ரை பண்ணிப் பாருங்களேன் 🙂

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s